டாக்டர் பட்டம் பெறும் இசை டாக்டர் இளையராஜா...

இசைஞானி இளையராஜாவிற்கு கவுரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி தர இருக்கிறார். இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது.

டாக்டர் பட்டம் பெறும் இசை டாக்டர் இளையராஜா...

பட்டமளிப்பு விழாவில் இசைஞானி இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மிருதங்க வித்துவான் உமையாள்புரம் சிவராமனுக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | வெளியானது விஜய் சேதுபதியின் 6வது படம் ஃபர்ஸ்ட் லுக்... "DSP"...

நாளை இளையராஜாவிற்கு பிரதமர் மோடி கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார் என தகவல்கள் வெளியாகியதில், அவரது ரசிகர்கள் படு குஷியில் ஆழ்ந்துள்ளனர்.

நாளை திண்டுக்கல் காந்தி க்ராம பல்கலைக்கழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் தான் இளையராஜாவுக்கு பிரதமர் கவுரவ டாக்டர் பட்டமளிக்க இருக்கிறார்.

மேலும் படிக்க | ஒரு தல காதல் தந்த வாத்தி... “பொயட்டு” தனுஷின் புதிய பாடல்...

ஏற்கனவே, பாஜக-வை  பெருமையாக பேசி முன்னுரை வெளியிட்டதால்தான் அவருக்கு எம்.பி பதவி கிடைத்தது என பல வகையான் அசர்ச்சைகள் கிளம்பிய நிலையில், தற்போது அவருக்கு கவுரவ பட்டமும் வழங்கப்பட இருப்பதால், ஒரு சிலர் இது குறித்து தங்களது கருத்துகளையும் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | தொடரும் சதீஷ் சர்ச்சை... முற்றுப்புள்ளியாய் வெளியான வீடியோ...