”என்னை அவமானப்படுத்திவிட்டனர் ”: விஜய்சேதுபதி படக்குழுவினர் மீது இளையராஜா புகார்...

தனது அனுமதி இல்லாமல் தனது பெயரை நீக்கிய கடைசி விவசாயி படக்குழுவினர் மீது இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்துள்ளார்.

”என்னை அவமானப்படுத்திவிட்டனர் ”:  விஜய்சேதுபதி படக்குழுவினர் மீது இளையராஜா புகார்...

ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து 40 ஆண்டுகள் தாண்டியும் தமிழ்  சினிமாவில் கோலொச்சி வரும் இசைஞானி ஞானி இளையராஜா கடந்த சில வருடங்களாக அவரின் செயலுக்காக அனைவரின் மத்தியிலும் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறார் இருந்தும் தற்சமயம் வெற்றிமாறன் மிஷ்கின் போன்ற முன்னணி இயக்குனர்களுடன் விடுதலை, துப்பறிவாளன் 2, மாயோன், தமிழரசன், மதுரை மணிகுறவன், க்ளாப், மாமனிதன், கடவுள் 2, நினைவெல்லாம் நீயடா, முன்பதிவு உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அத்துடன் அவரின் இசையில் உருவாகியுள்ள பல்வேறு படங்களும் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

இந்நிலையில் காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை இயக்கிய மணிகண்டன். தற்போது கடைசி விவசாயி என்ற படத்தைஅவரே தயாரித்து இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் லீடிங் ரோலில் நல்லாண்டி என்ற முதியவரும் மற்றும் யோகி பாபு, பசுபதி, உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர் மேலும் கவுரவ தோற்றத்தில் விஜய்சேதுபதியும் நடித்துள்ளார். விவசாயிகளின் அன்றாட வலிகளை பிரச்சனைகளை நேர்த்தியாக சொல்லும் வகையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இசையமைப்பதிற்கு இளையராஜாவை இப்படக்குழு ஒப்பந்தம் செய்திருந்தது.

இந்நிலையில் இந்தப் படத்தின் பாதி பாகத்திற்கு மேல் இளையராஜா இசையமைத்து முடித்திருந்த நிலையில் படக்குழுவுக்கும் இளையராஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இளையராஜாவுடன் பணியை தொடர விரும்பாத படக்குழு, படத்தில் இருந்து இளையராஜாவை நீக்கிவிட்டு அவருக்கு மாற்றாக சந்தோஷ் நாராயணனை வைத்து இசை தொடர்பான பணிகளை முடித்து விட்டனர்.

படத்தில் இருந்து நீக்கியது குறித்த தகவலை இளையராஜாவிடம் தெரிவிக்காமலே முழு படத்திற்கான இசை வேலைகளை முடித்துவிட்டு கடைசி விவசாயி படத்தின் டிரெய்லரில் ரிலீஸ் செய்திருந்தது படக்குழு. சமீபத்தில் அந்த டிரெய்லரை கண்ட இளையராஜா படத்தில் தனது இசை நீக்கப்பட்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். தனது அனுமதியை பெறாமல் இசையை நீக்கியதுடன் வேறுஒரு இசையமைப்பாளரை வைத்து படத்துக்கு இசையமைத்தது தனக்கு கௌரவ பிரச்னை என்று கருதி, இசைக் கலைஞர்கள் சங்கத்தில் கடைசி விவசாயி படக்குழு மீது இளையராஜா புகார் அளித்துள்ளார். விஜய் சேதுபதி நடித்து வரும் படக்குழுவினர் மீது இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்திருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.