என்னோட ஃபேன்ஸும், தமிழக மக்களும் இவ்வளவு பெரிய ஆதரவு கொடுக்கபிங்கனு நான் எதிர்பார்க்கல...நடிகர் சிம்பு உருக்கம்.!!

மாநாடு வெற்றி உற்சாகத்தையும், மேலும் மேலும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை அளித்துள்ளது என ரசிகர்களுக்கிடையே நடிகர் சிலம்பரசன் பேசினார்... 

என்னோட ஃபேன்ஸும், தமிழக மக்களும் இவ்வளவு பெரிய ஆதரவு கொடுக்கபிங்கனு நான் எதிர்பார்க்கல...நடிகர் சிம்பு உருக்கம்.!!

நடிகர் சிலம்பரசன் நடித்து வெளியான மாநாடு திரைப்படத்தின் 100 ஆவது நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தில் நடிகர் சிலம்பரசன் ரசிகர்களுடன் கலந்து கொண்டு பேசினார்.  முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,

இன்று மாநாடு திரைப்படைத்தின் 100வது நாள் எனக்கு மிகவும் ஸ்பேஷலான நாள், எனவே ரசிகர்களுடன் படம் பார்க்க வந்ததாக தெரிவித்தார். இது என்னுடைய படத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கவில்லை. தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன் என்றார்.

இந்த வெற்றிக்கு காரணமான தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர், ஒரு நடிகனுக்கு படத்தின் வெற்றி தான் சந்தோஷம் கொடுக்கும். மேலும் மேலும் எதாவது செய்ய நம்பிக்கையளிக்கும், இந்த வெற்றி மாநாடு குழுவிற்கும், தமிழ் சினிமாவிற்கும் உற்சாகத்தை கொடுத்துள்ளது என கூறினார்.

பின்னர் திரையரங்கில் ரசிகர்களுடன் பேசிய சிலம்பரசன்... உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்றும் கொரோனாவுக்கு அப்புறம் தியேட்டரிலிருந்து உங்களுடன் படம் பார்க்கணும்னு இங்க பார்க்க வந்திருக்கேன் என்றார்.

,மேலும் ரசிகர்கள் எனக்கு சப்போர்ட் பண்ணுவது மகிழ்ச்சியாக உள்ளது என கூறிய அவர், அன்னைக்கு ஸ்டேஜ்ல கண்கலங்கி ஒரு வார்த்தை தான் சொன்னேன் 
என்னோட பேன்சும் சரி,  தமிழக மக்களும் சரி இவ்வளவு பெரிய ஆதரவு கொடுக்கபிங்கனு நான் எதிர்பார்க்கல என தெரிவித்தார். கடைசியாக நீங்கள் இல்லாமல் நான் இல்லை என கூறி பேசி முடித்தார்...