கமலின் “விக்ரம்” பட முதற் காட்சியை காண நிச்சயம் செல்வேன் - எதிர்கட்சி தலைவர்!

விக்ரம் திரைப்படம் வரும் மூன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் மலேசியாவை சார்ந்த எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம்மை, கமல்ஹாசன் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். 

கமலின் “விக்ரம்” பட முதற் காட்சியை காண நிச்சயம் செல்வேன் - எதிர்கட்சி தலைவர்!

மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உருவாக்கி இருக்கும் திரைப்படம் விக்ரம். உலக நாயகன் கமல்ஹாசனால் ஈர்க்கப்பட்டு தான் சினிமாத்துறைக்குள் என்ட்ரி கொடுத்தவர் லோகேஷ். ஆனால் தற்போது தனது நான்காவது திரைப்படமே லோகேஷ் கனகராஜ் உலக நாயகனை வைத்து இயக்கி விட்டார். 

பான் இந்தியா திரைப்படமாக இருக்கும் விக்ரமில் நடிகர் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்தது தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகர் பஹத் பாசில் , நரேன், அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்து படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்திருக்கின்றனர். 

இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். மேலும் விக்ரம் திரைப்பட ப்ரோமோஷனுக்காக உலக நாயகன் உலகம் முழுவதும் சுற்றி வருகிறார்.

அதன் வகையில் தான் ப்ரோமோஷனுக்காக கமல்ஹாசன் மலேசியாவிற்கு சென்றிருந்த பொழுது மலேசியாவின் எதிர்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிமை சந்தித்து பேசியிருக்கிறார். மேலும் உலக நாயகனை சந்தித்தது குறித்து அன்வர் இப்ராஹிம் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் நெகிழ்ச்சியோடு பதிவிட்டு உள்ளார். 

அப்பதிவில்  சூப்பர் ஸ்டார் கமல்ஹாசனை நான் சந்தித்தேன், எங்களுக்குள் இந்திய வரலாறு குறித்தும் நல்லாட்சி குறித்தும் நீண்ட விவாதம் நடந்தது. மலேசியா தலைநகர்ல் ஜூன் மூன்றாம் தேதி வெளியாகும் விக்ரம் படத்தினுடைய முதற்காட்சியை காண்பதற்காக நிச்சயம் கலந்து கொள்வேன் என குறிப்பிட்டு உள்ளார்.