
கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. தமிழில் கதாநாயகியாக சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் ராஷ்மிகா.
தனது எதார்த்த நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய இவர், சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருப்பார்.
இந்நிலையில் ராஷ்மிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அப்போது, விஜய்யுடன் எப்போது நடிப்பீர்கள்? என்று ரசிகர் ஒருவர் கேட்டக் கேள்விக்கு மிக விரைவில் என்று பதிலளித்துள்ளார்.
மற்றொரு ரசிகர் தளபதியைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள்? என்று கேட்டதற்கு விஜய் என்னுடைய லவ் என்று பதிலளித்துள்ளார்.