"எனக்கு நடனமாட பிடிக்கும்" -ஸ்ரேயா...!!

"எனக்கு நடனமாட பிடிக்கும்" -ஸ்ரேயா...!!

எனக்கு நடனமாட பிடிக்கும் என நடிகை ஸ்ரேயா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரேயா நடித்துள்ள மியூசிக் ஸ்கூல் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரேயா கலந்து கொண்டார். கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். இப்படம் வருகிற 12ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரேயா, "மீண்டும் சென்னை வந்துள்ளதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னை ஏற்றுக்கொண்டதற்கு தமிழ் மக்களுக்கு நன்றி. இந்த படம் இதயப்பூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மீது திணிக்கப்படும் அழுத்தத்தை பற்றி இப்படம் பேசுகிறது. தெரிந்தோ தெரியாமலோ குழந்தைகள் இதுபோன்ற அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இது ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை பற்றிய படம். தனித்திறமைகள் பற்றியதல்ல" எனக் கூறியுள்ளார். 

மேலும், "எனது கடினமான காலகட்டத்தில் நான் நடனமாட தொடங்கி விடுவேன். நடனமாட எனக்கு பிடிக்கும். இத்திரைப்படத்திற்கு படக்குழுவினர் சிறப்பாக உழைத்துள்ளனர். இவர்களுடன் வேலை செய்தது அருமையான அனுபவமாக இருந்தது" எனக் கூறினார். 

தொடர்ந்து "இளையராஜாவை முதல் முறையாக இப்பட இசையமைப்பின்போது தான் பார்த்தேன்‌. மிகவும் அமைதியாக பாடல்களை உருவாக்கிக் கொண்டு இருந்தார். அவரது இடமே தெய்வீகமாக இருந்தது. இப்படத்தில் நடித்து எனக்கு பெருமையாக உள்ளது. எல்லோரும் இப்படத்தை திரையரங்குகளில் சென்று பாருங்கள்" என தெரிவித்துள்ளார்.

நிறைவாக, "எனக்கு குழந்தைகள் பிடிக்கும். இதில் நடித்த குழந்தைகள் அனைவரும் திறமையானவர்கள்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிக்க:வைகை ஆற்றில் இறங்கினார் அழகர்...!