எனக்கு இனிமே கவர்ச்சி வேடம் வேண்டாம்.... மனசு மாறிய நடிகை சோனா

மாறுப்பட்ட பாத்திரங்களில் தமிழில் நடிக்க விரும்புவதாக  நடிகை சோனா மனம் திறந்து பேசியுள்ளார்.

எனக்கு இனிமே கவர்ச்சி வேடம் வேண்டாம்.... மனசு மாறிய நடிகை சோனா

கவர்ச்சி, காமெடி, குணசித்திரம் என கலந்து கட்டிய நடிப்பில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார் நடிகை சோனா.  

தற்போது தொலைக்காட்சி தொடர்கள் மூலம் சின்னத்திரை நடிகையாகவும் களமிறங்கியுள்ளார்.

இது குறித்து நடிகை சோனா கூறியதாவது," சினிமா தான் எனக்கு அடையாளம் தந்தது. சினிமா தான் என் வாழ்க்கை.

தமிழில் ஆரம்பத்தில் கவர்ச்சி கதாப்பத்திரங்களில் நடித்ததால் இப்போது வரையிலும் கவரர்ச்சி கதாப்பத்திரங்கள் தான் அதிகம் வருகிறது. மலையாளத்தில் அப்படி இல்லை அங்கு வில்லி, குணசித்திரம், நகைச்சுவை என மாறுப்பட்ட பாத்திரங்கள் செய்து விட்டேன். அதே போல் தமிழிலும் செய்ய வேண்டுமென்பது தான் என் விருப்பம்.  

இப்போது தான் கொஞ்சம் மாறுப்பட்ட கதாப்பாத்திரங்கள் வர துவங்கியுள்ளது. “அபி டெய்லர்ஸ்” சீரியலை “வாலிப ராஜா” படத்தை இயக்கிய  சாய் கோகுல் ராம்நாத் இயக்குகிறார்.

படத்தில் வேலை பார்த்த குழு தான் இந்த சீரியலிலும் வேலை செய்கிறார்கள். இது ஒரு சீரியல் போல இருக்காது படம் போல தான் இருக்கும். இந்த கதாப்பாத்திரம் செய்ய அதுவும் ஒரு முக்கிய காரணம்.

சீரியலுக்கு போய் விட்டேன் என்பார்கள் ஆனால் இதுவும் ஒரு நடிப்பிற்கான வாய்ப்பு தான். சினிமா தான் என் வாழ்க்கை இப்போதும் நிறைய சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது.

தொடர்ந்து சினிமாவில் இருப்பேன் அதில் எந்த மாற்றமுமில்லை. மாறுபட்ட கதாப்பாத்திரங்களுக்காக காத்திருக்கிறேன் என்கிறார்.