டாக்டர் பட வசூலால் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா சிவகார்த்திகேயன்..!

என்னுடைய டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூலித்ததால், நான் சம்பளத்தை உயர்த்தவில்லை என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

டாக்டர் பட வசூலால் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா சிவகார்த்திகேயன்..!

சிவகார்த்திகேயன் - பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் அவரிடம், டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூல் செய்ததால் சம்பளத்தை உயர்த்திவிட்டீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், தனது சம்பளத்தை தாம் முடிவு செய்வதில்லை என்றும், தயாரிப்பாளர்கள் தான் முடிவு செய்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.