அந்த படம் பிடிக்காது எனக்கூறிய விக்ரம்...அவருக்கு சரியாக நடிக்க தெரியாது...விளாசியெடுத்த தேவயானியின் கணவர்!

நான் சரியாக நடிக்கவில்லை அந்த படத்தில்....

அந்த படம் பிடிக்காது எனக்கூறிய விக்ரம்...அவருக்கு சரியாக நடிக்க தெரியாது...விளாசியெடுத்த தேவயானியின் கணவர்!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர  நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் விக்ரம். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளிலும் நடித்து ரசிகர்கள் மனதில் இன்னுமும் ஒரு மாஸ் ஹீரோவாகவே வலம் வருகிறார். அதே சமயம் ரசிகர்களால் ‘சியான் விக்ரம்’ என்றும் அன்புடன் அழைக்கப்படுகிறார்.

சமீபத்தில் கூட இவர் தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்து வெளியான ’மஹான்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிப்பில் உருவாகிவரும் கோப்ரா திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் நடிகர் விக்ரம் விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் நான் சரியாக நடிக்கவில்லை என்று இயக்குனர் ராஜகுமாரனிடம் அப்போதே கூறியிருக்கிறாராம்.

விக்ரம் நடிப்பில் ராஜகுமாரன் இயக்கத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் விண்ணுக்கும் மண்ணுக்கும். அப்போது நான் சரியாக நடிக்கவில்லை என்று விக்ரம், இயக்குனர் ராஜகுமாரனிடம் கூறியுள்ளார். மேலும் விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் பிடிக்காது என நடிகர் விக்ரம் ஏதோ ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

இதனால் இதுகுறித்து பேசிய ராஜாகுமாரன், என்னைப் பொறுத்தவரை நடிப்பு என்றால் கை, காலை உடைத்து, கண்ணை மாற்றி மாற்றி பார்த்து நடிப்பது நடிப்பு கிடையாது. விக்ரமும் நல்ல நடிகரெல்லாம் கிடையாது. ஒன்னு ரஜினி சார் மாதிரி நடிப்பாரு, இல்லைன்னா கமல் மாதிரி நடிப்பாரு அவ்வளவுதான்” என கூறியுள்ளார். விக்ரம் குறித்து ராஜகுமாரன் பேசியது சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது.