விஜய்யுடன் இணைய தயாராக உள்ளேன் - நடிகர் கமல்ஹாசன் விருப்பம்..!

தமிழ் சினிமாவின் பெருமிதம் நடிகர் கமல்ஹாசன் நடிகர் விஜய்யோடு இணைய விருப்பமுள்ளதாக தெரிவித்து இருக்கிறார்.

விஜய்யுடன் இணைய தயாராக உள்ளேன் - நடிகர் கமல்ஹாசன் விருப்பம்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் விக்ரம். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படம் வருகிற ஜூன் மூன்றாம் தேதி வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர். 

மேலும் படத்துக்கான ப்ரோமோஷன் வேலைகள் மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்று வருகிறது. இதற்காக நடிகர் கமல்ஹாசன் உலகம் முழுவதும் சுற்றி வருகிறார். மலேசியாவில் ப்ரோமோஷன் ஒன்றில் கலந்து கொண்ட கமல்ஹாசனிடம் செய்தியாளர் ஒருவர் விக்ரம் படத்தின் மூன்றாம் பாகத்தில் தளபதியை எதிர்பார்க்கலாமா எனக் கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த கமல் விக்ரம் 3 படத்திற்காக ஏற்கனவே ஒருவரை ஒப்பந்தம் செய்திருக்கிறோம் என சூர்யாவை மறைமுகமாக கூறியுள்ளார். அதே சமயத்தில் நடிகர் விஜய் ஒப்புக் கொண்டால் அவரை வைத்து படம் தயாரிக்க ராஜ்கமல் பிலிம்ஸ் தயாராக உள்ளது எனக்கூறியுள்ளார். 

இதுகுறித்து ஏற்கனவே நடிகர் விஜய் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக கூறப்பட்டது. இதன் இடையில் கமல்ஹாசனின் கூறியிருக்கும் இப்படிப்பட்ட பதிலால் கூடிய விரைவில் கமல்ஹாசன் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம் குறித்த அறிவிப்புகள் வெளிவரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.