மக்களுக்கும் மிகப் பெரிய நன்றிக்கடன்பட்டுள்ளேன்: எமோஷனலான சிம்பு...!

மாநாடு படம் மிக பெரிய பெற்றதையடுத்து, அந்த வெற்றியை தேடி தந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதத்தில் நெகிழ்ச்சியுடன் நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மக்களுக்கும் மிகப் பெரிய நன்றிக்கடன்பட்டுள்ளேன்: எமோஷனலான சிம்பு...!

டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. நீண்ட தாமதம் மற்றம் போராட்டத்திற்கு பிறகு வெளியாகி இருக்க இந்த படம் பட்டித்தொட்டி எங்கும் செம்ம ரெஸ்பான்ஸை பெற்றுள்ளது. 

இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையாக இருக்கட்டும், சிம்பு, எஸ்.ஜே.சூர்யாவோட நடிப்ப இருக்கட்டும் ரசிகர்கள், பிரபலங்கள்னு பலரின் பாராட்டையும் பெற்று இருக்கு, விமர்சன ரீதியா மட்டுமில்லாம வசூல் ரீதியாவும் இந்த படம் சிறப்பான வெற்றிய தான் பெற்றிருக்குனு சொல்லனும்.

இப்படி இருக்க வெற்றி காரணமான தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமா நெகிழ்ச்சியுடன் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்காரு நம்ம சிம்பு..

அந்த அறிக்கையில, இறைவன் மீதும் உழைப்பின் மீதும் நம்பிக்கை வைத்து மிக அழகாக உழைத்த படம் "மாநாடு", எப்படியாவது தன்னை நேசிப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்திவிட வேண்டும் என்ற தன் எண்ணத்திற்கு ஏற்ற பலன் கிடைத்துள்ளது. என்று தெரிவிச்சு இருக்காரு.

மேலும் அந்த அறிக்கையில “மாநாடு" படம் உலகம் முழுக்க மிகப் பெரும் வெற்றியை அள்ளியெடுத்துள்ளது. இதற்கு காரணமான தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அற்புதமான இயக்கத்தை தந்த வெங்கட் பிரபு, அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்கள் மாநாடு படக்குழு அவரது தாய், தந்தை வெளியிட்ட விதியோகஸ்தர்கள் திரையரங்க உரிமையாளர்கள் திரையுலக நண்பர்கள் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், ரத்தமான அன்பு ரசிகர்களுக்கும், உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் மிகப் பெரிய நன்றிக்கடன்பட்டுள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறியிருக்காரு

ரசிகர்களுக்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் தனது அத்தனை உணர்வுகளையும் அடக்கிவிட முடியாது என்றும் ஆனால் பதிலுக்குக் தெரிவிக்க வேறு வார்த்தைகள் இல்லையே என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ள சிம்பு, ஆடியோ விழாவில் தான் சிந்திய சிறு துளிகளைத் தரையில் விழவிடாமல் தாங்கிக் கொண்ட உங்கள் அன்பிற்கு நான் மகிழ்கிறேன் என்று தெரிவிச்சி இருக்காரு.

மாநாடு படத்திற்கு வெறியோடு உலகம் முழுக்க வெற்றியைத் தேடித் தந்திருக்கும் அனைவருக்கும் தனது வணக்கம், வாழ்த்துகளும் என்று சிம்பு குறிப்பிட்டிருக்காரு.

இந்த அறிக்கைய பார்த்த ரசிகர்கள் பலர் சிம்புக்கு ஆதரவா தங்களோட கமெண்ட்ஸ்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிச்சிகிட்டு இருக்காங்க.