ரசிகரின் காலைத் தொட்ட நடிகர்! வைரல் வீடியோ!!!

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், நடிகர் ஹிரிதிக் ரோஷன், ரசிகர் ஒருவர் காலில் விழுந்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

ரசிகரின் காலைத் தொட்ட நடிகர்! வைரல் வீடியோ!!!

பாலிவுட் நட்சத்திரங்கள் சாதாரண மனிதர்கள் என்பதை மறந்து பல ரசிகர்கள் அவர்களைக் கடவுள்கள் போலவே பாவித்து, பல ரசிகர் மன்றங்கள் அமைப்புகள் அமைப்பதோடு, ஒரு சிலர் கோவில்களே கட்டி கும்பாபிஷேகம் செய்து வருகின்றனர். அந்த வரிசிஅயில் ஒருவ்ர தற்போது ஒரு பாலிவுட் பிரபலத்தின் காலில் விழுந்திருக்கிறார். அதற்கு அந்த நடிகர் செய்தது பயங்கரமாக வைரலாகி வருகிறது.

ஹிர்திக் ரோஷன் மற்றும் சைஃப் அலிகான் நடிப்பில் தற்போது வெளியாக தயாராகி வரும் படம் தான் விக்ரம் வேதா. 2017-இல் வெளியான சூப்பர் ஹிட் தமிழ் படம் தான் விக்ரம் வேதா. மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற படம் என்றால் அது விக்ரம் வேதா தான். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரீமேக்வுட்டாக மாறிவரும் பாலிவுட்டில் ரீமேக் செய்ய படக்குழு முடிவெடுத்தனர். மேலும் அதே படக்குழுவினருடன் அந்த படத்தை உருவாக்கிய நிலையில், சமீபத்தில் அந்த் அபடத்தின் ட்ரெயிலர் வெளியாகியது. மாபெரும் வரவேற்பு பெற்ர நிலையைல், படத்திற்கான எதிர்பார்ப்பு, பாலிவுட் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் உருவாகியிருக்கிறது.

மேலும் படிக்க | விஜய் சேதுபதி அளவுக்கு இல்லை!!!- ஹ்ரிதிகை குறை சொல்லும் ரசிகர்கள்!

இதனைத் தொடர்ந்து, நேற்று, ஹிர்திக், ஃபிட்னெஸ் தொடர்பாக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில், ஒரு ரசிகர் ஓடி வந்து ஹிர்திக் ரோஷனின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் கேட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, ஹிர்திக் உடனே, அந்த் அரசிகர் காலிலேயே மீண்டும் விழுந்து, அங்கிருந்த அனைவரையும் ஆசீரியத்தில் ஆழ்த்தினார்.

இந்த வீடியோ தற்போது படு வைரலாகி வருவதோடு, ஹ்ரிதிக் மீதான மரியாதை அதிகரித்திருப்பதாகவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். ‘தன்னடக்கம் மிக்க சூப்பர் ஸ்டார்’ என்றும், ‘மோஸ்ட் ஹேண்ட்சம்’ என்றும் அனைவரும் கமெண்ட் செய்து, அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.