”மத்தகம்” ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது டிஸ்னி+ ஹாட்ஸ்டார்...!

”மத்தகம்” ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது டிஸ்னி+ ஹாட்ஸ்டார்...!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார்  தளத்தின் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மத்தகம்” என்ற புதிய வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது.

Screen Scene Media Entertainment தயாரிப்பில்,    இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் தான் “மத்தகம்”. இந்த வெப் சீரிஸில் நடிகர்கள் அதர்வா, மணிகண்டன், நிகிலா விமல் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களிலும், பிரபல இயக்குநர் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி (திவ்யதர்ஷினி), வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். 

இசையமைப்பாளர் தர்புகா சிவா இசையமைக்கும் இந்த வெப் சீரிஸீக்கு, எட்வின் சாகே ஒளிபதிவு செய்துள்ளார். மேலும், இந்த சீரிஸீன் பரப்பரப்பான ஆக்சன் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் வடிவமைத்துள்ளார்.

தொடர்ந்து இந்த படம் குறித்து இயக்குனர் பிரசாத் முருகேசன் கூறும் போது, 30 மணி நேரத்தில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களைச் சுவாரஸ்யமாகச் சொல்லும் சீரிஸ் தான் “மத்தகம்”.ஒரு இரவில் நாயகனுக்கும், வில்லனுக்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டத்தைப் படம்பிடித்தது சவாலாக இருந்ததாகவும், இந்த சீரிஸ் ரசிகர்களுக்குக் கண்டிப்பாக ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  “மத்தகம்” வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது.