விவாகரத்துக்கு பின்..இரண்டாவது திருமணம் குறித்து பேசிய தொகுப்பாளினி - மகேஷ்வரி!!

இரண்டாவது திருமணம் குறித்தும் அவரது விவாகரத்து குறித்தும் முதன் முறையாக தொகுப்பாளினியாக இருக்கும் மகேஷ்வரி அவரே பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

விவாகரத்துக்கு பின்..இரண்டாவது திருமணம் குறித்து பேசிய தொகுப்பாளினி - மகேஷ்வரி!!

தொகுப்பாளினிகள் தமிழ் சினிமாவில் அதிகம் உள்ள நிலையில் ரசிகர்களால் கவனிக்கப்பட்டவர்களில் ஒருவரான மகேஷ்வரி தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் கமல் நடிக்கும் விக்ரம் மற்றும் விக்ரம் நடிக்கும்  மகான், அதனுடன் செல்வராகவன் நடிக்கும் சாணி காகிதம் போன்று அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி இருக்கிறாரம். சமீபத்தில் வெளியான ரைட்டர் திரைப்படத்தில் கூட இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மகேஷ்வரி கொரோனா காலக்கட்டத்தில் அதிக வகையான போட்டோ ஷூட்களை நடத்தி சமூக வலைதளங்களின் பக்கம் பதிவிட்டு வந்த நிலையில் இவர் மக்களின் கவனத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னதாக வெளியில் தெரிய ஆரம்பித்த மகேஷ்வரி ஒரு பேட்டியில் தனது விவாகரத்து குறித்தும் அவரது இரண்டாவது திருமணம்  குறித்தும் பேசியுள்ளார்.

அதில் அவர் தான் 10 வருடத்திற்கும் மேலாக தான் சிங்கிளாக இருந்து வருகிறேன். நிறைய தருணங்களில் எனது வாழ்க்கை சரியாக அமையவில்லை என கஷ்டப்பட்டுள்ளேன் ஒரு கட்டத்தில் இது தான் நம் தலையில் எழுதி இருக்கும் தலையெழுத்து என நினைத்துக் கொள்வேன். எனக்கு திருமணம் முடிந்து ஒரு வருடத்தில் விவாகரத்து ஆனது, குழந்தையை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என்பதில் கவனமாக இருத்தேன் என பேசினார், மேலும் தனது இரண்டாவது திருமணம் பற்றிய பயம் எனக்கு அதிகமாக உள்ளது எனவும் அவர் எப்படி இருப்பார், அந்த திருமணம் ஆனது நீண்ட நாள் நிலைக்குமா என்பது குறித்து எல்லாம் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.