வருங்கால தமிழ் ஹிப்ஹாப் ஸ்டார்களுடன் ஹிப் ஹாப் தினம் கொண்டாடிய ஹிப் ஹாப் ஆதி...!

ஹிப் ஹாப் தினத்தின் போது, தமிழ் ஹிப்ஹாப்பின் வருங்கால சூப்பர் ஸ்டார்களுடன் சேர்ந்து உணவருந்திய போது எடுத்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

வருங்கால  தமிழ் ஹிப்ஹாப் ஸ்டார்களுடன் ஹிப் ஹாப் தினம் கொண்டாடிய ஹிப் ஹாப் ஆதி...!

ஹிப் ஹாப் தினம் :

ஹிப்-ஹாப் தினம், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 11ம் தேதி அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது. ஹிப்-ஹாப் என்பது ஒரு தெரு முனையிலிருந்து, உலகின் மிக முக்கியமான இசை வகைகள் மற்றும் கலாச்சார தாக்கங்களில் ஒன்றாக முன்னேறியுள்ளது. ஹிப்-ஹாப், மற்ற இசை பாணிகளைப் போலவே, பிற வடிவங்களில் அதன் வேர்களைக் கொண்டுள்ளது, மேலும் அதன் வளர்ச்சி பல்வேறு கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டது. 

ஹிப் ஹாப்பின் வரலாறு : 

ஹிப்-ஹாப் தினமானது ஜமைக்காவின், டி.ஜே, கூல் ஹெர்க்கிடம் இருந்து தொடங்கப்பட்டது. அவர் தான் ஹிப்-ஹாப் தினத்தை நிறுவிய பெருமைக்குரியவர். ஹிப்-ஹாப்பில் கூல் ஹெர்க்கின் தாக்கம் மிகவும் ஆழமானது. அதாவது 1973 ம் ஆண்டு, அண்ணன்-சகோதரி டி.ஜே. கூல் ஹெர்க் மற்றும் சிண்டி கேம்ப்பெல் தான் இந்த வகை தோன்ற காரணமானவர்கள். 

ஹிப் ஹாப் என்றால் என்ன ?

ஹிப்-ஹாப், 1980கள் மற்றும் 90களில் பரவலான கலாச்சார இயக்கம். மேலும், ராப்பிற்கான பின்னணி இசை, தாள அல்லது ரைமிங் பேச்சை உள்ளடக்கிய இசை பாணியானது, இயக்கத்தின் மிகவும் நீடித்த மற்றும் செல்வாக்குமிக்க கலை வடிவமாக மாறியது, இந்த ஹிப் ஹாப். 

தமிழ் ஹிப் ஹாப் :

தமிழ் ஹிப் ஹாப் பாடகர்களாக யோகி.பி, லேடி கஷ், என பலர் இருந்தாலும் சமீப காலங்களாக பரீட்சையமானவர் ஹிப் ஹாப் ஆதி தான். பல ஹிப் ஹாப் பாடல்களை பாடி வரும் இவர், திரை துறையிலும் இறங்கி கலக்கி வருகிறார். ஆல்பம் பாடல்களில் ஹிப் ஹாப் பாடலிகளை கொடுத்து வந்தவர், சினிமாவிலும் அதனை வைக்க தொடங்கினார். முன்னதாக அவர் ஹிப் ஹாப் தமிழா என்ற இசை குழுவில் இருந்தார். முதலில் ' சென்னை சிட்டி கேங்ஸ்டர் ' என்ற பெயரில், வணக்கம் சென்னை படத்தில் பாடியுள்ளார். அதன் பின்னர் ஆம்பள திரைப்படத்தில் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். சினிமா துறைக்கு வருவதற்கு முன்பிருந்தே அவரின் இசைக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.