12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் ஹிட் கூட்டணி... தளபதி66 லேட்டஸ்ட் அப்டேட்

12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் ஹிட் கூட்டணி... தளபதி66 லேட்டஸ்ட் அப்டேட்

பீஸ்ட் திரைப்படத்திற்கு அடுத்ததாக நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 66 திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

தளபதி 66 படத்திற்காக நடிகர், நடிகை தேர்வு நடைபெற்று வந்த நிலையில், பிரகாஷ்ராஜ் இத்திரைப்படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு பேட்டியின் போது பீஸ்ட் பட நடிகருடன் விரைவில் இணைவேன் என்று கூறியுள்ளார். ஏற்கனவே பிரகாஷ்ராஜ் இயக்குனர் வம்சி இயக்கத்தில் பிருந்தாவனம், தோழா, மகரிஷி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்

நடிகர் பிரகாஷ்ராஜ் விஜய்யுடன் கில்லி, போக்கிரி, சிவகாசி மற்றும் வில்லு போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். இவர்களின் கூட்டணி ரசிகர்களால் ரசிக்கப்பட்டு மிகுந்த வரவேற்ப்பை பெற்றது.

12 வருடங்களுக்கு பிறகு பிரகாஷ்ராஜ், விஜயுடன் இணைவதாக வெளியான தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.