சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த பட அப்டேட் இதோ..!!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த பட அப்டேட் இதோ..!!

ரஜினி மற்றும் சிறுத்தை சிவா கூட்டணி முதன்முறையாக அமைத்துள்ளதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அண்ணாத்த படத்தை வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளியையொட்டி திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

தற்போது சிறுத்தை சிவா அண்ணாத்த படம் இயக்குவதற்காக ஏற்கனவே சூர்யா உடன் கமிட்டான படத்தை தள்ளி போட்டுள்ளார். தற்போது அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து ரஜினி மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் மற்றொரு படம் நடிக்க முடிவெடுத்துள்ளாராம்.

ரஜினி மீண்டும் சிறுத்தை சிவாவுடன் மற்றொரு படத்திலும் பட்டையைக் கிளப்பப் போகிறார் என்ற செய்தியை அறிந்த ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு கொண்டாடி வருகின்றனர்.