நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற - தி லெஜண்ட் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு..

நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற - தி லெஜண்ட் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு..

சென்னையில், சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடித்துள்ள தி லெஜண்ட் திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

ஜெ-டி ஜெர்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள தி லெஜெண்ட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் நாசர், திரைப்படத்தின் ஹிந்தி டிரெய்லரை வெளியிட்டார்.

நடிகர் சுமன் கன்னட டிரெய்லரையும், நடிகை லதா மலையாள டிரெய்லரையும், நடிகர் விஜயகுமார் தெலுங்கு டிரெய்லரையும் வெளியிட்டனர். தமிழ் டிரெய்லரை நடிகர் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அன்பு செழியன் ஆகியோர் வெளியிட்டனர்.

அதன் பின் பேசிய சரவணன், உடன் நடித்த நடிகர் விவேக் பற்றிய நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்தார்.