திடீரென டிரெண்ட் ஆகும் விஜய்யின் ஹேஷ்டேக்!! என்ன காரணம்? குழப்பத்தில் ரசிகர்கள்

தளபதி விஜய் குறித்த ஹேஷ்டேக்குகள் திடீரென தெலுங்கில் டிரெண்டாகி வருகிறது.

திடீரென  டிரெண்ட் ஆகும் விஜய்யின் ஹேஷ்டேக்!! என்ன காரணம்? குழப்பத்தில் ரசிகர்கள்

தளபதி விஜய் குறித்த ஹேஷ்டேக்குகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆவது சர்வசாதாரணமான  ஒன்று.  ஏனென்றால் வாரத்திற்கு இரண்டு முறையாவது விஜய்யின் ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், தற்போது திடீரென தெலுங்கில்  விஜய்யின்  ஹேஷ்டேக்  டிரெண்டாகி வருவது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான ’நண்பன்’ திரைப்படம் முதல் முறையாக தெலுங்கில்  டப் செய்யப்பட்டு ரிலீஸானது. இந்த படம் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது என்றே சொல்லலாம். அதற்கு பிறகு விஜய்யின் பல திரைப்படங்கள் தமிழில் வெளியாகும் போதெல்லாம்  தெலுங்கிலும் வெளியாகி வந்தது.

இந்நிலையில் தற்போது விஜய் ’தளபதி 66’ படம் மூலம் நேரடியாகவே ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கவுள்ள இப்படத்தை  தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.

இதற்கிடையில்  ’நண்பன்’ திரைப்படம் தெலுங்கில் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதையடுத்து, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள விஜய் ரசிகர்கள் அதனை கொண்டாடும் விதமாக விஜய்யின் 10 ஆண்டுகள் என்ற ஹேஷ்டேக்கை தற்போது டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தெலுங்கில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.