ஹாரிபாட்டர் நடிகர் உடல்நல குறைவால் காலமானார்...!

ஹாரிபாட்டர் நடிகர் உடல்நல குறைவால் காலமானார்...!

பிரபல ஹாலிவுட் படமான ஹாரிபாட்டரில் ஹாக்கிரிட் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ரோபி கோல்ட்ரேன் காலமானார். 

நடிகர் ரோபி கோல்ட்ரேன் 1950 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி, கிளாஸ்கோவிற்கு அருகிலுள்ள ரூதர்க்லனில் அந்தோனி ராபர்ட் மெக்மில்லனில் பிறந்தார். இவர் ஒரு சிறந்த நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும், எழுத்தாளராகவும் தன்னை மெருகேற்றிக்கொண்டவர்.

 

இந்நிலையில், 72 வயது நிரம்பிய இவர் கடந்த இரண்டு வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார். தற்போது, நேற்று இரவு அவரது உடல் நிலை மிக மோசமடைந்த நிலையில் ஸ்காட்லாந்தின் லார்பெட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.