பார்வையில் மயக்கும் ஹரீஸ் கல்யாண்... முதலிடம் பிடித்து அசத்தல்..!

பார்வையில் மயக்கும் ஹரீஸ் கல்யாண்... முதலிடம் பிடித்து அசத்தல்..!

2020 விரும்பத்தக்க ஆண்களின் பட்டியலில் ஹரீஷ் கல்யாண் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

‘சென்னை டைம்ஸ்’ பத்திரிக்கை ஒவ்வோர் ஆண்டும் திரையுலகின் விரும்பத்தக்க ஆண்களின் பட்டியலைக் கணக்கெடுத்து வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், 2020ம் ஆண்டின் விரும்பத்தக்க ஆண்களின் பட்டியலில், ஹரீஷ் கல்யாண் முதல் இடத்தில் வகிக்கிறார். இவர் நடித்த இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும் என்ற தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. அப்படத்தில் வரும் கண்ணம்மா பாடலை ரிங்டோனாக வைக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்தளவிற்கு அப்பாடம் செமையாக வைரலானது.

இந்த நிலையில் அவர், 2020 விரும்பத்தக்க ஆண்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இவரை தொடர்ந்து, ‘கொச்சி டைம்ஸ்’-இல் முதல் இடத்தில் வகிக்கும் துல்கர் சல்மான், ‘சென்னை டைம்ஸ்’-இல் 2ம் இடத்தில் வகிக்கிறார்.