இசையமைப்பாளரை கண்டுபிடித்தால் தங்ககாசு... மீண்டும் அசத்தும் தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன்.! 

ஜென்டில்மேன் 2 ' படத்தின் இசையமைப்பாளர் யார் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு தங்க காசு பரிசாக வழங்கப்படும் என தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் அறிவித்துள்ளார். 

இசையமைப்பாளரை கண்டுபிடித்தால் தங்ககாசு... மீண்டும் அசத்தும் தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன்.! 

கோலிவுட்டின் முன்னணி  தயாரிப்பாளராக வலம் வரும் கே.டி.குஞ்சுமோன், சரத்குமார் மற்றும் இயக்குநர் ஷங்கர் என பல ஜாம்பவான்களை திரையுலகில் உருவாக்கினார். 

பிரமாண்ட படங்களை தயாரித்தது மட்டுமில்லாமல் அவற்றின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பிரமாண்டமாக நிகழ்த்திக்காட்டியவர். பல காலமாக திரைத்துறையில் ஒதுங்கி இருந்த இவர் தற்போது மீண்டும் திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளார். அதன் ஆரம்பத்தையே  அதிரடியான அறிவிப்புடன் செய்து,  அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். 

தற்போது ஜென்டில்மேன் 2 படத்தின் ஆரம்பகட்ட பணிகளை துவக்கியுள்ளார். இப்படத்தின் இயக்குநர், நடிகர், தொழில்நுட்ப குழுவினர் எவரும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தற்போது ரசிகர்களுக்கு இதனை ஒரு போட்டியாக அறிவித்து அசத்தியுள்ளார். 

விரைவில் இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது அறிவிக்கப்படவுள்ளது. ஆனால் அவர் யாரென சரியாக கணிக்கும் ரசிகர்களில் முதல் மூன்று பேருக்கு தங்க காசுகள் பரிசாக அளிக்கப்படவுள்ளது. எல்லாவற்றிலும் புதுமையையும் பிரமாண்டத்தையும் கையாளும் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அவர்கள், ஜென்டில்மேன்2 படத்திலும் பிரமாண்ட அறிவிப்புகளை துவங்கியிருப்பது,  ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் இடையே  பாராட்டை குவித்து வருகிறது.

Image