நமிதா ரேஞ்சுக்கு மாறிய நடிகை இலியானா...”ஒல்லி பெல்லி” இலியானாவா இது? அதிருப்தியில் ரசிகர்கள்..

நமிதா ரேஞ்சுக்கு மாறிய நடிகை இலியானா...”ஒல்லி பெல்லி” இலியானாவா இது?  அதிருப்தியில் ரசிகர்கள்..

பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை இலியானா, தமிழில் ‘கேடி’ படம் மூலம் அறிமுகமானார். ஆனால் அதற்கு பிறகு அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இருப்பினும் பாலிவுட், டோலிவுட் என அங்கு தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.

இதற்கிடையில் கடந்த 2012 ஆம் ஆண்டு பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழில் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்தார். ஆனால் இந்த முறை தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

ஏனென்றால், நண்பன் படத்தில் இடம்பெற்ற ‘ஒல்லி பெல்லி’ பாடலுக்கு இவர் நடனமாடியது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த பாடலுக்கு அப்புறம் இலியானா என்றாலே அவரது ஒல்லியான ஸ்லிம் உடல்வாகு தான் ரசிகர்களுக்கு ஞாபகம் வரும் அந்தளவிற்கு தமிழ் ரசிகர்களின் மனதில் பெரும் உச்சத்தை தொட்டார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை இலியானா, அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை நடிகை இலியானா பதிவு செய்துள்ளார்.  

அதில் அவர் வெறும் உள்ளாடை மட்டுமே அணிந்து உள்ள நிலையில், இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களுடைய பாணியில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும் ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து அதிருப்தி அடைந்தனர்.

ஏனெனில் இலியானா என்றாலே அவரது ஒல்லியான ஸ்லிம் உடல்வாகு தான் முதலில் ஞாபகம் வரும், ஆனால் தற்போது அவர் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படத்தில் இலியானா செம குண்டாக இருப்பதைப்  பார்த்து அதிருப்தி அடைந்து சிலர் தங்களது அதிருப்தியை கமெண்ட்ஸில் பதிவு செய்து வருகின்றனர்.