துணிவு படத்தின் ’கேங்ஸ்டா’ பாடல் வெளியானது...!

துணிவு படத்தின் ’கேங்ஸ்டா’ பாடல் வெளியானது...!
Published on
Updated on
1 min read

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியானது. 

கோலிவுட்டின் டாப் நட்சத்திரமாக வலம் வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். இவரது நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் 3 வது முறையாக இணைந்துள்ள திரைப்படம் துணிவு. அதாவது இதே கூட்டணி நேர் கொண்ட பார்வை, வலிமை படத்தை தொடர்ந்து இணைந்துள்ள திரைப்படம் துணிவு . 

ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பர்ர்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் துணிவு. பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்திலிருந்து ’சில்லா சில்லா’ பாடலும் ‘காசேதான் கடவுளடா’ பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில், துணிவு படத்தின் 3 வது சின்ஹ்கிள் பாடலான ‘கேங்க்ஸ்டா’ பாடல் வெளியாகியுள்ளது. “நோ கட்ஸ், நோ க்ளோரி” என அஜித்தின் வசனத்தில், ஷபிர் சுல்தான் மற்றும் ஜிப்ரான் குரலில் பாடல் மாஸாக வெளியாகியுள்ளது. மேலும் பாடல் வரிகளை ஷபிர் சுல்தான் மற்றும் விவேகா எழுதியுள்ளனர். பாடல் வெளியான ஒரு மணி நேரத்தில் 8 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் படத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து,  கமெண்ட்ஸ்களை தெரிக்கவிட்டு வருகின்றனர்.  

-- சுஜிதா ஜோதி   

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com