விக்ரம் படத்தின் வெற்றிக்காக - நன்றி தெரிவித்து மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்ட கமல்..!!

விக்ரம் படத்தின் வெற்றிக்காக -  நன்றி தெரிவித்து மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்ட கமல்..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள 'விக்ரம்' படம் இந்தியாவைத் தாண்டி உலக நாடுகளிலும் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த படம் வசூலில் உலகம் முழுவதும் ரூ.270 கோடி வசூலித்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் 'விக்ரம்' படம் குறித்து ஒரு வீடியோவை கமல்ஹாசன் மீண்டும் வெளியிட்டிருக்கிறார். அவ்வீடியோவில், " தமிழர்கள் இல்லாத நாடு இல்லை. உலகம் முழுக்க பறந்து விரிந்திருக்கும் உலக தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். திரையிடப்பட்ட நாடுகளில் எல்லாம் விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்று வருகிறது. இந்த பிரமாண்டமான வெற்றியை எனக்குப் பரிசளித்த தொப்புல் கொடி உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறந்த சினிமாக்களின் மூலம்  உங்களை தொடர்ந்து எண்டர்டெயின்மெண்ட் செய்வதுதான், நான் உங்களுக்கு செய்யக்கூடிய பதில், நன்றி என்பதை  நான் அறிவேன். அதை செய்வேன்.  “ உயிரே!! உறவே!! தமிழே!! ” நன்றி  எனக் கூறியிருக்கிறார் கமல்ஹாசன்.