“மாயோன் ” படத்தின் ப்ரோமோஷனுக்காக - தமிழகம் முழுவதும் வலம் வரும் ரதம்..!! - ஆர்வம் காட்டும் பொதுமக்கள்...!

“மாயோன் ” படத்தின் ப்ரோமோஷனுக்காக - தமிழகம் முழுவதும் வலம் வரும் ரதம்..!! - ஆர்வம் காட்டும் பொதுமக்கள்...!

நடிகர் சிபி சத்தியராஜ் நடித்துள்ள ’மாயோன்’ திரைப்படத்தின் புரொமோஷனுக்காக, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரதம், மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கிஷோர் இயக்கத்தில், நடிகர் சிபி சத்தியராஜ், தான்யா ரவிச்சந்திரன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள மாயோன் திரைப்படம், வரும் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்தின் புரொமோஷனுக்காக, கதையில் வரும் பள்ளிகொண்ட கிருஷ்ணர் சிலை அடங்கிய ரதம், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

அவ்வகையில், பெரம்பலூர் வந்த மாயோன் ரதத்தை, பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.