முதன்முறையாக பா.ரஞ்சித் படத்திற்கு ’ஏ’ சான்றிதழ்.. அப்படி என்ன இருக்கிறது படத்தில்?

காதல் பற்றி தான் படம் தான் என்று நினைத்தோமே? இல்லையா அப்போ?

முதன்முறையாக பா.ரஞ்சித் படத்திற்கு ’ஏ’ சான்றிதழ்.. அப்படி என்ன இருக்கிறது படத்தில்?

பா.ரஞ்சித்: தமிழ் சினிமாவில் பலதரப்பட்ட இயக்குநர்கள் உள்ளனர். கிராமத்து கதைகளை இயக்க பாரதிராஜா, முத்தையா, காதலை அழகாக சொல்ல மணிரத்னம், கௌதம் வாசுதேவ் இப்படி ஒடுக்கப்பட்ட மக்களின் இயல்பான வாழ்க்கையை சினிமாவாக எடுக்க இருக்கும் ஒருசில இயக்குநர்களில் முதன்மையானவர் என்றால் அது பா.ரஞ்சித். சமுதாயத்தில் யாரெல்லாம் பெரும்பான்மையான மக்களால் ஒடுக்கப்படுகிறார்களோ அவர்களது வாழ்க்கைகளம் எவ்வளவு அழகானது, அவர்கள் தங்களது அடிப்படை பிரச்னைகளுக்கு எவ்வாறு குரல் கொடுக்கிறார்கள் என்பதை எதார்த்தமாக திரையில் கொண்டு வருவார் பா.ரஞ்சித். 

பட வரிசை: அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சர்பட்டா பரம்பரை என தனது படங்கள் மூலம் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பவர் பா.ரஞ்சித். அதேபோல நீலம் ப்ரொடக்‌ஷன் என்ற நிறுவனம் மூலம் இதுபோன்று தரமான படங்களை தயாரித்து வருகிறார். 

நட்சத்திரம் நகர்கிறது: சர்பட்டா பரம்பரை படத்தை தொடர்ந்து, அவரது இயக்கத்தில் மிகவும் சைலண்ட்டாக எடுக்கப்பட்டுள்ளது நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம். துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், கலையரசன், ஷபீர் உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இருந்தப் படம் காதலைப் பற்றியதாக அமைந்துள்ளது. நாடகக் குழுவை சேர்ந்த ஒரு குழுவுக்குள் இருக்கக் கூட பலதரப்பட்ட காதலும், அதனை சுற்றி இந்த சமுதாயம் கட்டமைக்கும் கதைகள் மற்றும் அரசியலை வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளதாக டிரைலரை பார்க்கும் போது தெரியவருகிறது. 

படத்திற்கு ஏ சான்றிதழ்: முதன்முறையாக பா.ரஞ்சித் காதலை மையமாக வைத்து நட்சத்திரம் நகர்கிறது படத்தை எடுத்திருப்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வரும் 31-ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு தணிக்கைக் குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதன் முறையாக பா.ரஞ்சித்தின் படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தில் ஓரினச் சேர்க்கை பற்றிய காதல் காட்சிகளும், ரொமான்ஸ் சீன்களும் இருப்பதால், 18 வயதிற்கு கீழே உள்ளவர்கள் இப்படத்தை பார்க்கக் கூடாது என்ற எண்ணத்தில் ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: தாலி கட்டுனாதா காதல தொடர முடியும்னா? அவ்வளவு தானா காதலுக்கான மதிப்பு?