வெளியானது ‘நானே வருவேன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள்!!!

வெளியானது ‘நானே வருவேன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள்!!!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடித்த நானே வருவேன் திரைப்படம், வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். நடிகர் தனுஷுடன் இந்துஜா ரவிச்சந்திரன்யோகி பாபு, என பலர் நடித்துள்ளனர். மேலும், எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ‘வீர சூரா’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த பாடலானது, யுவன் இசையை வைத்து மெச்சுகிறது. விறுவிறுப்பான கதையை சொல்வது போல இருக்கும் இந்த இசையின் மூலம், இரண்டு தனுஷ் கதாபாத்திரங்களுக்கும் இடையிலான போட்டி நன்றாக வெளிப்பட்டுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜாவின் குரலிலேயே வந்துள்ள இந்த பாடல், மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த பாடலின் சிறப்பம்சமே, பாடல் வரிகளை எழுதியது இயக்குனர் மற்றும் நடிகர் செல்வ ராகவன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மயக்கம் என்ன’ படம் வெளியாகி, 10 வருடங்களுக்குப் பிறகு, அண்ணன் மற்றும் தம்பி இணையும் படம் தான் இந்த நானே வருவேன். அதுமட்டுமின்றி, தற்போது தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகிய படம் தான் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’. அதிலும் செல்வராகவன் தனுஷ் கூட்டணி இருக்கும் நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.

மேலும், 2019இல் வெளியான ‘என்.ஜி.கே’ படத்தைத் தொடர்ந்து யுவனுடன் செல்வராகவன் இணையும் இந்த படத்தின் பாடல்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்று தான் கூறவேண்டும்.

முன்னதாக தனுஷ் நடிப்பில் உருவான திருச்சிற்றம்பலம் திரைப்படம், கடந்த ஆகஸ்ட் 18 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். நித்யாமேனன், ராஷி கண்ணாப்ரியா பவானி சங்கர்பாரதிராஜாபிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் வெளியாகி 15 நாட்களை கடந்துவிட்ட நிலையில், 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.