திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு பாய்...பாய்...சொன்ன நடிகைகள்...மீண்டும் முக்கிய கதாபாத்திரத்திற்கு தூண்டில் போடுகிறார்களாம்?

திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு பாய்...பாய்...சொன்ன நடிகைகள்...மீண்டும் முக்கிய கதாபாத்திரத்திற்கு தூண்டில் போடுகிறார்களாம்?

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பரிட்சயமான சில நடிகைகள் தற்போது சினிமாவிற்கு முட்டுக்கட்டை  போட்டு வெளி மாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் செட்டிலாகி விட்டனர். மேலும் எங்களுக்கு சினிமாவில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை கொடுத்தால் தான் நடிப்போம் என கூறி வருகின்றனர்.

பொதுவாகவே நடிகைகள் திருமணத்திற்கு பிறகோ அல்லது தகுந்த கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை என்றாலோ அல்லது எதிர்பார்த்த சம்பளம் கிடைக்கவில்லை என்றாலோ  அவர்களது சொந்த மாநிலங்கள் அல்லது வெளியூர்களுக்கு சென்று செட்டிலாகி விடுவர். அந்த வரிசையில் நடிகை கோபிகா மட்டும் திருமணத்திற்கு பிறகு குடும்பம், குழந்தை என இல்லற வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதால் சினிமாவில் நடிக்க விருப்பமில்லாமல் உள்ளார். அவரை தவிர்த்து அப்படி வெளியூர்களில் செட்டில் ஆன நடிகைகளின் பட்டியலை பார்ப்போம்..

ரீமாசென் : தமிழ், தெலுங்கு படங்களுக்கு மேல் அதிகமாக ஹிந்தி, வங்காள மொழி படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் மின்னலே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் மாதவன், அப்பாஸ் , ரீமாசென், நாகேஷ், விவேக் என பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் பாடிய  பாடல்கள் எல்லாம் இன்றளவும் இளைஞர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. குறிப்பாக 90"ஸ் களின் favourite என்றே சொல்லலாம்.  இதை தொடர்ந்து பகவதி, தூள் , செல்லமே, திமிரு, வல்லவன் போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் கடந்த 2012ம் ஆண்டு ஷிவ் கரண் சிங் என்ற மும்பை தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.  திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த ரீமாசென் தற்போது சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். 

மாளவிகா : தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். 1999 ஆம் ஆண்டு வெளியான உன்னை தேடி என்ற படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே, ரோஜாவானாம், பூப்பறிக்க வருகிறோம் போன்ற பல படங்களில் நடுத்துள்ளார். மேலும் பல படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார். இவரது நடனத்திற்கென்றே ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு. இவர் கடந்த 2007 ம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி நடித்தும் வருகிறார். 

லைலா :   ஹிந்தி, தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். 1996 ம் ஆண்டு துஷ்மன் துனியா கா என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமாகி சினிமாத்துறையில் கால் பதித்தார். தமிழில் கள்ளழகர், முதல்வன், ரோஜாவனம் போன்ற படங்களில் நடித்துள்ளார். பின்னர் பார்த்தேன் ரசித்தேன், தீனா, தில், அள்ளி தந்த வானம், காமராசு, உன்னை நினைத்து,பிதாமகன், கண்டா நாள் முதல், பரமசிவன் போன்ற படங்கள் லைலாவிற்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இவர் கடந்த 2006 ம் ஆண்டு ஈரான் நாட்டு தொழில் அதிபரான மெஹதீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அதன் பின்னர் நடிக்காமல் இருந்தவர் தற்போது கார்த்தியின் சர்தார் படத்தில் நடித்துள்ளார்.

ரூபினி :   இவர் ரஜினிகாந்த், விஜயகாந்த், மோகன், சத்யராஜ், போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.  1987 ம் ஆண்டு வெளியான மனிதன் படத்தில் அறிமுகமானார். அழகு, நடிப்பு, கவர்ச்சி போன்ற திறமைகளால் தனது யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தினார். இவர் 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கணவர் குழந்தைகளுடன் வெளிநாட்டில் செட்டிலாகி உள்ளார். அவ்வப்போது தமிழ்நாட்டிற்கு வரும்போது சினிமா பிரபலங்களை சந்தித்து செல்வது வழக்கம். இந்நிலையில் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

 நவ்யா நாயர் : மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கிய நவ்யா, பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடந்த 2004 ம் ஆண்டு வெளியான அழகிய தீயே என்ற படத்தின் மூலம் முதலில் அறிமுகமானார். மேலும் பாசக்கிளிகள், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தவர். பின்னர் சந்தோஷ் மேனன் என்பவரை கடந்த 2010 ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்ட இவர் தற்போது கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார். 

நதியா :  இவர் தமிழில் 1985 ல் வெளியான பூவே பூச்சூடவா படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் , தெலுங்கு, மலையாளம் என கலக்கி வருகிறார். ரஜினி, பிரபு, சத்யராஜ் போன்ற நடிகர்கள் தொடங்கி தற்போதுள்ள நடிகர்கள் வரை நடித்துள்ளார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பித்தவர். இவர் 1988ல் சிரில் காட்போல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு 2004 ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான m. குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இவரது நடிப்பால் தனக்கு இப்படி ஒரு friendly ஆன அம்மா இல்லையே என பலரையும் ஏங்க வைத்தார். இதனை தொடர்ந்து தற்போது முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.