திரைப்பட நடிகை ஸ்ரேயா திருப்பதியில் சுவாமி தரிசனம்....!!!

திரைப்பட நடிகை ஸ்ரேயா திருப்பதியில் சுவாமி தரிசனம்....!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை விஐபி தரிசனத்தில் நடிகை ஸ்ரேயா சரண் தனது தாயாருடன் வந்து சுவாமி தரிசனம் செய்துள்ளார்.  தரிசனம் முடிந்த பிறகு ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

கோயில் வெளியே வந்த நடிகை ஸ்ரேயாவை பார்த்து ரசிகர்கள் அவருடன் செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.  திருப்பதியில் சாமி தரிசனம் செய்தது மிக சந்தோசமாக இருப்பதாகவும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் அனைத்தையும் இறைவன் பார்த்து கொள்வார் எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க:  தொடங்கியது ராமச்சந்திரா ஆதித்தனார் நினைவு கோப்பை போட்டி..!!