அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிக்பாஸ் பிரபலம் !! உடல்நலம் குறித்து விளக்கம்

குணச்சித்திர நடிகையும், பிரபல செய்தி வாசிப்பாளருமான பாத்திமா பாபு மருத்துவமனையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிக்பாஸ் பிரபலம் !! உடல்நலம் குறித்து விளக்கம்

கடந்த 25 வருடங்களாக பல்வேறு தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருப்பவர் பாத்திமா பாபு. பல படங்களிலும், தொலைக்காட்சி சீரியல்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். 

Bigg Boss 3 'க.பா.'வை வெளியேற்றச் சொன்னால் 'பா. பா.'வை வெளியேற்றிய பிக்  பாஸ் | Fathima Babu gets evicted from Bigg Boss 3 - Tamil Filmibeat

இந்த நிலையில், பாத்திமா பாபு ஸ்ட்ரெக்ச்சரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் படியான வீடியோவும், மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெறும் படியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதற்கு தனது யூடியூப் சேனல் மூலம் விளக்கமளித்துள்ள அவர், சிறுநீரக பிரச்னையால் அவதியடைந்து வந்த அவர் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். 

ஸ்டெர்ச்சரில் ஆபரேஷன் தியேட்டருக்கு சென்ற பாத்திமா பாபு.. திடீர்னு  என்னாச்சு.. வைரலாகும் வீடியோ! | Fathima Babu undergone a surgery to remove  Kidney stone - Tamil Oneindia

தற்போது தான் நலமுடன் இருப்பதாகவும், உடல்நலம் சார்ந்த சில டிப்ஸ்களையும் கூறியுள்ளார். பாத்திமா மற்றும் அவரது கணவர் பாபு இருவரும் சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.