ஏப்பா ஒரு ட்வீட் போட்டது குத்தமா..? பிக்பாஸ் பிரபலத்தை ரம்யா பாண்டியனுடன் கோர்த்து விடும் ரசிகர்கள்!

ஏப்பா ஒரு ட்வீட் போட்டது குத்தமா..? பிக்பாஸ் பிரபலத்தை ரம்யா பாண்டியனுடன் கோர்த்து விடும் ரசிகர்கள்!

சூர்யா ஜோதிகா இணைந்து தயாரித்து 6தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் தான் ‘ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’. இந்த திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி தற்போது சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக ரம்யா பாண்டியன் நடித்துள்ளார்.


இந்த திரைப்படத்தை பார்த்த, பிக்பாஸ் நிகழ்ச்சியால் பிரபலமடைந்த ஹரிஷ் கல்யாண், தனது டுவிட்டர் பக்கத்தில், ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படத்தைப் பார்த்து நெகிழ்ந்து போனதாக தெரிவித்துள்ளார்.  அத்துடன் இந்த திரைப்படத்தை இயக்கிய குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் ஹரிஷ் கல்யாண்.

இவரின் வாழ்த்துக்களுக்கு நடிகை ரம்யா பாண்டியன் தனது நன்றியை தெரிவித்திருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் நடிகை ரம்யா பாண்டியனுடன் இணைந்து நடிக்கும்படி நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.