தம்பி வா தலைமை ஏற்க வா... விஜயை திமுகவிடம் மாட்டிவிட்ட ரசிகர்கள் 

முதல்வர் ஸ்டாலினே, நடிகர் விஜய்யை அழைத்து தமிழ்நாட்டின் பொறுப்பை ஒப்படைப்பதுபோல ஒரு போஸ்டர் திண்டுக்கல்லில் ஒட்டப்பட்டதையடுத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தம்பி வா தலைமை ஏற்க வா... விஜயை திமுகவிடம் மாட்டிவிட்ட ரசிகர்கள் 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை இடத்தில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மே 7ஆம் தேதி தமிழக முதலமைச்சராக மு.க ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டதையடுத்து 33 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதனையடுத்து பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. கொரோனோ தடுப்பு பணி தொடங்கி பல்வேறு துரித நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் விஜயை வைத்து திண்டுக்கல் மாவட்டத்தில் பரபரப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. விஜய் அரசியலுக்கு வருவதாக ஏற்கனவே பலமுறை பேச்சு எழுந்து எழுந்து அடங்கி உள்ளது. பாஜகவின் ரெயிடுகள், கெடுபிடிகள் போன்றவற்றில் விஜய் கடந்த காலங்களில் சிக்கினாலும், ஒருவேளை திமுகவில் இணைந்து அதிமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வார் என்று கடந்த முறை தேர்தலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதையும் கண்டுகொள்ளாத விஜய் தனது திரைத்துறையில் மட்டும் கவனத்தை செலுத்தி  வருகிறார்.
அவர் சுமார் இருந்தாலும் அவரின் ரசிகர் இருக்க விடுவதில்லை, ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பி விட்டுவிடுவார்கள். அது என்னவென்றால்

திண்டுக்கல் மாநகரம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கான நல்லாட்சியை வழங்கிட ” தம்பி வா தலைமை ஏற்க வா” என மறைந்த முதல்வர் அண்ணா கலைஞரை அழைத்தது போல முதல்வர் செங்கோல் கொடுத்து திரைப்பட நடிகர் விஜயை திமுக கட்சிக்கு தலைமை தாங்க அழைப்பது போல் நகர் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டியை சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றன.