
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் அஜித் நடித்து முடித்துள்ள படம் வலிமை. இவரது நடிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஹீமா குரேஷி இணைந்து நடித்துள்ளார்.
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை ஹீமா குரேஷி. இவர் வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க கிட்டதட்ட 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் கூறுகின்றது.
இந்நிலையில் இவர் சமீபத்தில் போட்டோஷூட் ஒன்றை நடத்தி அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை ஹீமா குரேஷி தனது சோஷியல் மீடியா பக்கமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் வலிமை பட ஹீரோயினா இது? என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.