விஜயகாந்த்தா இவர்...ஆளே அடையாளம் தெரியாமல் ... லேட்டஸ் போட்டோவை பார்த்து ஷாக் ஆக ரசிகர்கள்.!!

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் போட்டோ ஒன்று இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

விஜயகாந்த்தா இவர்...ஆளே அடையாளம் தெரியாமல் ... லேட்டஸ் போட்டோவை பார்த்து ஷாக் ஆக ரசிகர்கள்.!!

1980, 90 களில் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவரான இருந்தவர் விஜயகாந்த். இவர் தமிழ் சினிமாவில் 20க்கும் அதிகமான படங்களில் போலீஸ் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். சினிமாவில் தனக்கென ஒரிடத்தை பிடித்த விஜயகாந்த், அதன்பின்னர் அரசியலில் நுழைந்து தனக்கென கட்சியை ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்தில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த், அரசியலில் இருந்தும் சினிமாவில் இருந்தும் விலகினார். விஜயகாந்த் கடைசியாக தனது மகன் சண்முகபாண்டியன் ஹீரோவாக அறிமுகமான சகாப்தம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

இந்தநிலையில் அவரது சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. கம்பீர தோற்றத்தில் இருந்த விஜயகாந்தை அந்த புகைப்படத்தில் பார்க்கும்போது, எப்படி இருந்தவர், இப்படி ஆள் அடையாளமே தெரியாத நிலையில் உள்ளாரே என நினைக்க தோன்றுகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும், தொண்டர்களும் இது கேப்டனா, எப்படி இருந்தவர் இப்படி இருக்கிறாறே என ஆச்சர்யத்துடன் கூறி வருகின்றனர்.