வாரிசு - துணிவு ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு...! அப்படி என்ன தான் இருக்கு அந்த போஸ்டரில்?

வாரிசு - துணிவு ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு...! அப்படி என்ன தான் இருக்கு அந்த போஸ்டரில்?

மதுரையில் அஜித், விஜய் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு....

ரசிகர்களின் கொண்டாட்டம்:

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாக விளங்கும் விஜய், அஜித் இருவரும் சினித்துறையில் தங்களுக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளனர். அஜித், விஜய் இவர்களில் ஒருவர் படம் திரையில் வந்தாலே அவர்களது ரசிகர்கள் அதை பெரிய அளவில் கொண்டாடி வருவார்கள். அதே இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் தனி தனியே திரையில் வந்தால் செல்லவே வேணாம். கொண்டாட்டமும் இருக்கும் அதே சமயம் மோதலும் இருக்கும். 

வாரிசு - துணிவு:

இப்படி பட்ட கொண்டாட்டமும், மோதலும் தான் இந்த முறையும் இருக்க போகுது. ஏனென்றால், வருகிற 2023 பொங்கலுக்கு அஜித் நடிப்பில் உருவாகியுள்ள “துணிவு” படமும், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “வாரிசு” படமும் சேர்ந்து ஒரே நாளில் வெளியாக உள்ளது. இதனால் அவர்களது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் மனகவர்ந்த நடிகர்களுக்காக பட போஸ்டர்களை ஆங்காங்கே ஒட்டி வருகின்றனர்.

போஸ்டர் யுத்தம்:

அந்த வகையில், மதுரை மாநகர் முழுவதும் விஜய், அஜித் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டுவதில் ஒரு யுத்தமே நடந்து வருகின்றது. அப்படி அருகே அருகே ஒட்டப்பட்டுள்ள இவர்களது போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போட்டி கருத்துக்கள் நிறைந்த போஸ்டர்:

அதாவது, விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில், ”40 தொகுதி மக்களின் வாரிசு தளபதி எங்கள் விஜய்” என்றும், அஜித் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில், ”வாய் உதார் வேணா மாட்டிக்காத வீணா... நம்மளோட வேலை பார்த்து ஊரே பேசும் தானா” என்றும் வசனங்கள் இடம்பெற்றுள்ளது. விஜய், அஜித் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களில் முழுவதும் போட்டி கருத்துக்கள் நிறைந்த வசனங்கள் இடம் பெற்றுள்ள நிலையில், தற்போது வைரலாகி வருகிறது.