விஜய்க்கு 10 அடியில் வெண்கல சிலை திறப்பு.. வைரல் புகைப்படம்

விஜய்க்கு 10 அடியில் வெண்கல சிலை ஒன்றை ரசிகர்கள் திறந்துள்ளனர்.

விஜய்க்கு 10 அடியில் வெண்கல சிலை திறப்பு.. வைரல் புகைப்படம்

சென்னை பனையூரில் உள்ள பண்ணை வீட்டில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் ஹைதராபாத்தில் முடிந்து முக்கிய காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று பணையூரில் உள்ள விஜயின் பண்ணை வீட்டில் விஜய் மக்கள் இயக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஜய் பங்கேற்கவில்லை.

இதில் 300க்கு மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொண்டனர். மேலும் விஜய்க்கு 10 அடியில் வெண்கல சிலை ஒன்றை ரசிகர்கள் திறந்துள்ளனர். மாஸ்டர் படத்தில் JD  கதா பாத்திரத்தில்  நடித்ததற்காக இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.