தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவை ஒரு மாதத்திற்கு முன்பே கணித்தாரா செல்வராகவன்...? இணையத்தில் வைரலாகும் டுவிட்

தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவை ஒரு மாதத்திற்கு முன்பே கணித்தாரா செல்வராகவன்...? இணையத்தில் வைரலாகும் டுவிட்

நடிகர் தனுஷும், ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் காதலித்து கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கின்றனர். கிட்டத்தட்ட 18 வருடங்கள் சுமூகமாக சென்றுகொண்டிருந்த இவர்களது திருமண வாழ்வு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

தனுஷும், ஐஷ்வர்யாவும் தாங்கள் விவாகரத்து செய்யவிருப்பதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். தனுஷ் - ஐஸ்வர்யாவின் இந்த அறிவிப்பைப் பார்த்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் தனுஷின் சகோதரர் செல்வராகவன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே இந்த பிரிவை கணித்து தான் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளதாக நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் தேதி இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், பதிவு ஒன்றை குறிப்பிட்டிருந்தார். அதில் ‘தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சனையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள்’ என்று பதிவு செய்திருந்தார்.

ஆனால், இந்த டுவிட் அன்றைய நிலையில் யாருக்கும் புரியாத நிலையில் தற்போது படித்து பார்க்கும் போது தனுஷ்-ஐஸ்வர்யா விவகாரம் குறித்துதான் அவர் இப்படி பதிவு செய்திருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.