“ஊ சொல்றியா மாமா” பாடலை தொடர்ந்து அடுத்த பாடல் பாடிய ஆண்ட்ரியா..! ஆர்வத்தில் ரசிகர்கள்

பிரபல பாடகி ஆண்ட்ரியா “ஊ சொல்றியா மாமா” பாடலை தொடர்ந்து மற்றொரு பாடலை பாடியுள்ளார்.

“ஊ சொல்றியா மாமா” பாடலை தொடர்ந்து அடுத்த பாடல் பாடிய ஆண்ட்ரியா..! ஆர்வத்தில் ரசிகர்கள்

கோலிவுட்டில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. இதையடுத்து இவர் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் சிறந்த பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியா பல வெற்றிப் படங்களில் பாடல்களை பாடியுள்ளார். இவரின் குரலுக்கு மயங்காத ரசிகர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு தன் குரலால் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்துள்ளார்.

சமீபத்தில் கூட தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜீன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படத்தில் “ஊ சொல்றியா மாமா” என்ற பாடலை நடிகை ஆண்ட்ரியா பாட, அதற்கு நடிகை சமந்தா நடனம் ஆடியிருந்த நிலையில், இந்தப்பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகையும், பாடகியும் ஆன ஆண்ட்ரியா “ஊ சொல்றியா மாமா” பாடலை தொடர்ந்து அடுத்தப்படியாக தற்போது இன்னொரு பாடலை பாடியுள்ளார். நடிகர் நட்டி நட்ராஜ் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் உருவாகி வரும் ‘வெப்’ என்ற திரைப்படத்திற்காக ஒரு பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடியுள்ளார். இந்த பாடலை கார்த்திக் ராஜா கம்போஸ் செய்துள்ளார்.

வேலன் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் அனைவரும் “ஊ சொல்றியா மாமா” பாடலை போன்றே இந்த பாடலும் அமைந்திருக்கும் என்ற  மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.