பிரபல நடன இயக்குநர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்...

கொரோனா வைரஸ் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரபல நடன இயக்குநர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்...

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வந்த சிவசங்கர், முன்னணி நடிகர்களுடன் இணைந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவசங்கர் மாஸ்டரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

நடன இயக்குனர் சிவசங்கர் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடலுக்கு இன்று பிற்பகல் இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.