பிரபல சினிமா ரிப்போர்ட்டர் திடீர் மரணம்! பிரபலங்கள் அஞ்சலி!

பிரபல சினிமா பத்திரிக்கையாளரான கௌஷிக், திடீரென இறந்துள்ளார். இது சினிமா வட்டரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல சினிமா ரிப்போர்ட்டர் திடீர் மரணம்! பிரபலங்கள் அஞ்சலி!

ஒரு படம் வெளியாகி அந்த படம் எந்த தியேட்டரில் ஓடுகிறது என்றால், யார் நடித்திருக்கிறார்கள் என்பது பார்ப்பதற்கு முன், படத்தின் ரிவியூ என்ன என்பதை பார்க்க தான் இங்கு அனைவரும் காத்து வருகின்றனர். அதிலும், பிரபல சினிமா பத்திரிக்கையாளர் கௌஷிக் எல்.எம் என்ன கூறுகிறார் என்பதைப் பார்க்க, தமிழ் சினிமா ரசிகர்கள் படு ஆர்வமாகக் காத்து வருவது வழக்கமாகி விட்டது. ஆனால், இப்போது அவர் நம்மோடு இல்லை.

சாஃப்ட்வேர் முதல் சினிமா வரை!

சாதாரண சாஃப்ட்வேர் பொறியாளராக பணி புரிந்து வந்த கௌஷிக், தனது மனதளவில் வேறு வேலையை தேடிக் கொண்டிருந்தார். தன்னைத் தானே தேடிய நேரம், அவரது வாழ்க்கையில் கைக் கொடுத்தது சினிமா தான். அப்போது, தான் பார்த்த படங்கள் எப்படி இருந்தது என்ற உண்மையான விமர்சனத்தை வெளியிடத் தொடங்கினார். அதற்கு பல ரசிகர்கள்ம் குவிந்தனர்.

சினிமா தான் வாழ்க்கை!

மனிபால் பல்கலைக்கழகத்தில் மீடியா & என்டர்டெயின்மென்ட் எம்பிஏ-வுக்கு விண்ணப்பித்தார். பின், ஒரு சில தனியார் இணையங்களில் தனது சினிமா விமர்சனங்களை பதிவிட்டு வந்தார். தனது திறமையை உணர்ந்ததாலும், ரசிகர்கள் அதிகரித்ததாலும், ஃப்ரீலேன்சராக பணி புரியத் துவங்கினார். படங்களை ரசித்து, கவனித்து பிரித்து மேயும் ஒரு ‘சினிமா பைத்தியமாக’ சிலரால் செல்லமாக அழைக்கப்படும், 35 வயதே ஆன கௌஷிக், தற்போது மாரடைப்பால் இறந்து விட்டார்.

இந்த செய்தி சினிமா வட்டாரத்த்ல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோலிவுட் மட்டுமின்றி, டாலிவுட் மாலிவுட் என பல பிரபலங்களும், அவரது இழப்பை நினைத்து வருந்தி பதிவிட்டு வருகின்றனர்.

#RIPKaushikLM :

தனுஷ், துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, எஸ்.ஜே சூரியா, ராகவா லாரென்ஸ், அதுல்யா ரவி, தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, தமண், கீர்த்தி சுரேஷ், சசிகுமார், அதிதி ராவோ ஹைதரி, விக்ரம் பிரபு என ஒட்டுமொத்த சினிமா உலகும், அவரது இழப்பை நினைத்து வருந்தியுள்ளது. ட்விட்டர் பக்கத்தில், #RIPKaushikLM என்பது தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. அவரது இழப்பு, சினிமாவிற்கே பெரும் பாதிப்பு என அனைவரும் பதிவிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.