திருச்செந்தூர் கோவிலில் பிரபல திரைப்பட நடிகை ரம்யா கிருஷ்ணன் சுவாமி தரிசனம்..!

திருச்செந்தூர் கோவிலில் பிரபல திரைப்பட நடிகை ரம்யா கிருஷ்ணன் சுவாமி தரிசனம்..!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரபல திரைப்பட நடிகை ரம்யா கிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்தார்.

உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு பிரபல திரைப்பட நடிகை ரம்யா கிருஷ்ணன் வந்திருந்தார். இவா் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள சத்ரு சம்கார மூர்த்தி சன்னதியில் அபிஷேகத்தில் கலந்து கொண்டார்.

இதனையடுத்து மூலவர் சண்முகர் வள்ளி தெய்வானை தட்சிணாமூர்த்தி பெருமாள் ஆகிய சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் யானை தெய்வானைக்கு பழம் கொடுத்து  ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். அவருடன் அவர் மகன் உறவினர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.