அடுத்த படம் கோவா 2 தான்!- வைபவ் Exclusive:

காட்டேரி படத்தின் வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினரிடம் பேசிய போது புதிய அப்டேட் தெரியவந்துள்ளது. இதனால், சினிமா ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சி கிடைத்துள்ளது.

அடுத்த படம் கோவா 2 தான்!- வைபவ் Exclusive:

ஹாரர் படங்கள் இப்படிக் கூட இருக்கலாம் என, ‘யாமிருக்க பயமே’ போன்ற படம் கொடுத்த இயக்குனர் டீகேவின் அடுத்த ஹாரர் படைப்புதான் காட்டேரி. வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பாஜ்வா, ஆத்மிகா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படமானது தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஸ்டூடியோ க்ரீன் கே. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படமானது, எஸ். ஆர். பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியிடப்பட்டது. 5 ஆகஸ்டு வெளியான இந்த படத்தை ரசிகர்கள் நல்ல வரவேற்புக் கொடுத்து வரும் நிலையில், படக்குழுவுடன் சிறப்பு பேட்டி ஒன்று எடுக்கப்பட்டது. அதில், பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியானது.

இயக்குனர் டீகே:

ஏற்கனவே யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் படங்களைக் கொடுத்த டீகே, தனது மூன்றாவது படத்தை ஹார் படமாக உருவாக்கியுள்ளார். இந்த படத்தின் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது என்று கேட்டதற்கு, “மற்ற படங்கள் போல தான் இந்த படமும். ஒரு பங்களாவிலோ அல்லது காட்டுக்குள்ளோ மாட்டிக் கொண்டு, அங்கு இருக்கும் பேயிடம் இருந்து தப்பிக்க படும்பாடுகள் தான் இந்த படத்திலும் காட்டப்படுள்ளது. ஆனால், நாங்கள் திரைக்கதையிலும் உருவாக்கத்திலும் எங்களது தனித்துவத்தைக் காட்டியுள்ளோம். மற்றப்படி இதுவும் ஒரு ரெகுலர் பேய் படம் தான். லாஜிக் வைத்து பார்க்காதீர்கள். அப்ப்டிப் பார்த்தால், படம் பிடிக்காமல் போகி விடும். படத்தை, எண்டெர்டயின்மெண்டிற்காக மட்டுமே பார்த்தால், இது ஒரு சிறப்பான படம் தான். படத்தைப் பார்த்து ரசிகர்கள் வயிறு வலிக்க சிரித்து தான் வெலியேறுவார்கள்” என்று கூறினார்.

அது மட்டுமின்றி, படத்தில் அவருக்கே உரித்தான அடல்டு காமெடிகள் இருக்கும் என்றும் அவர் கூறினார். மேலும், நடிகர்கள் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளதாகவும் டீகே தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகர் வைபவிடன் பேசிய போது, அவர் பெரும் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.

கோவா 2 உறுதி:

2010ம் ஆண்டு வெளியான மெகா ஹிட் காமெடி திரைப்படம் தான் கோவா. தமிழ்நாட்டின் தூங்காநகரமான மதுரையில் இருந்து, வெளிநாட்டு வாழ்க்கையை தேடி ஓடும் மூன்று இளைஞர்களின் நகைச்சுவையான கதை தான் கோவா. வித்தியாசமாக, எடுக்கப்பட்ட இந்த கதை, வெளியாகி 12 வருடங்கள் ஆன நிலையில், பல ஆண்டுகளான இந்த படத்திற்கான இரண்டாவது பாகத்தை ரசிகர்கள் படு ஆர்வமாக எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், ‘காட்டேரி’ படத்தைக் குறித்துப் பேசும்போது, படம் நன்றாக உருவாகியிருப்பதாகக் கூறிய பின், தான் கோவா 2 படத்தில் தேர்வாகியுள்ளதாகவும், அந்த படத்திற்கான லுக் டெஸ்ட் நடந்துக் கொண்டிருப்பதாகவும் தகவலளித்தார்.

இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. மேலும், கோவா 2 படம் உறுதியாகி விட்டதாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

எப்போதும், வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்யும் நடிகர் வைபவ், அடுத்த வீட்டுப் பையன் என்ற உணர்வுக் கொடுக்கும் வகையிலேயே நடித்து வருகிறார். அந்த வகையிலேயே, தற்போதும் படங்களை செய்து வருவதாகவும், அடுத்த படம், கோவா 2 தான் என்றும் தெரிவித்தார். மேலும், படத்தில் மிர்ச்சி சிவா இணைய வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவலளித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் காமெடி நாயகன் கருணாகரன், தனது காமெடி கதாபாத்திரத்தை நன்றாகவே செய்திருக்கிறேன் என்று கூறினார். நேற்று வெளியான இந்த படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், வைபவிற்கு அனைவரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.