எனக்கு சம்பளம் கொடுக்கும் அளவுக்கு பாலிவுட்டில் பணம் இல்லை: பரபரப்பான மகேஷ் பாபுவின் பேச்சு !!

மகேஷ் பாபுவுக்கு இவ்வளவு கோடி சம்பளமா? என வாயைப் பிளக்க வைக்கும் அளவில் தற்போது அவர் ஒரு கருத்து கூறியிருக்கிறார். மேலும், எனக்கு சம்பளம் கொடுக்கும் அளவிற்கு பாலிவுட்டிற்கு தகுதி இல்லை என்றும் கூறியுள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்ததோடு, மகேஷ் பாபு குறித்து பாலிவுட் வட்டாரம் புறம் பேசி வருகிறது.

எனக்கு சம்பளம் கொடுக்கும் அளவுக்கு பாலிவுட்டில் பணம் இல்லை: பரபரப்பான மகேஷ் பாபுவின் பேச்சு !!

டோலிவுட்டில் மிகவும் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் மகேஷ் பாபு. சமீபத்தில் ஒரு கருத்து கூறியிருக்கிறார். சர்காரு வாரி பாட்டா என்ற படத்தில் நடித்துள்ளார். வருகிற 12ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் இந்த படத்திற்காக பலரும் ஆர்வமாகக் காத்து வருகின்றனர். இந்த நிலையில், தற்ப்பொது அவர், பாலிவுட்டால் தனக்கு சம்பளம் கொடுக்க முடியாது என்று கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

3 மொழிகளில் உருவாகி வெளியாக இருக்கும் மேஜர் என்ற படத்தின் ப்ரொமோஷன்களில் கலந்து கொண்ட டாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மகேஷ் பாபு, பாலிவுட் குறித்து பேசினார். அப்போது, பாலிவுட்டில் எப்போது களமிறங்க போகிறார் என கேள்விக் கேட்கப்பட்டது. அதற்கு, “நான் இப்படி பேசுவது திமிறாகக் கூட தெரியலாம். ஆனால், எனக்கு இது வரை பல பாலிவுட் பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால், அவர்களால் எனக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை போல. அதனால், எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. தெலுங்கு திரை உலகில் எனக்கு இருக்கும் ஸ்டார்டம், மற்ற இண்டஸ்ட்ரிகளில் கிடைக்க வாய்ப்பில்லை. இன்றைய உலகில், தெலுங்கு சினிமா பல உச்சங்களை அடைந்து வருகிறது. அதில் ஒரு பங்கு எனக்கும் இருக்கிறது என்பது எனக்கு பெருமையாக இருக்கிறது” என்று கூறினார்.

இதன் மூலம், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான மகேஷ் பாபுவின் சம்பளம் எவ்வளவாக இருக்கும் என்ற கேள்வி கிளம்பியுள்ளது. அதற்கான பதில் இதோ! பொதுவாக படத்தின் பட்ஜெட்டைப் பொருத்து தனது சம்பளத்தை மாற்றும் மகேஷ் பாபு, பொதுவாக 50 இல் இருந்து 60 கோடி வரை சம்பளம் பெருவார் எனக் கூறப்படுகிறது. மேலும் தற்போது தயாரிப்பில் இறங்கியுள்ள மகேஷ் பாபு, பல கோடிகளை செலவிட்டு படத்தை எடுப்பதோடு, அதை விட அதிகமான வசூலையும் பெறுகிறார் என நம்பத்தகுந்த வட்டாரம் தெரிவிக்கிறது. இது குறித்து பல பாலிவுட் பிரபலங்கள் புறம் பேசி வருகின்றனர்.

அதில் குறிப்பிட வேண்டியது, பிரபல முன்னணி பாலிவுட் தயாரிப்பாளரான முகேஷ் பட் பேசியது தான். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய முகேஷ் பட், “ பாலிவுட்டால் அவரது சம்பளத்தைக் கொடுக்க முடியாவிட்டால், மிகவும் நல்லது. அவருக்கு எனது வாழ்த்துகள். அவர் எங்கிருந்து வருகிறார் என்பதை நான் மதிக்கிறேன். அவரிடம் திறமை உள்ளது, பல ஆண்டுகளாக அவர் உருவாக்கிய திறமையால் அவருக்கு 'எக்ஸ்' மதிப்பு உள்ளது. அவர் தென்னிந்தியாவில், வெற்றி பெற்ற முன்னணி நடிகராக இருக்கிறார், மேலும் அவர் நம் படங்களின் திருப்தியின் அடிப்படையில் எதைப் பெற விரும்புகிறாரோ அதைத் தக்க வைத்துக் கொண்டால், பாலிவுட் அவரது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட முடியாவிட்டால், அதில் யார் மீதும் தவறில்லை. அவருக்கு எனது வாழ்த்துகள். ஒவ்வொன்றும் அவரவர் நன்மைக்கே." என்று சுற்றி வளைத்து பேசியிருக்கிறார்.

மேலும் பேசிய அவர், ஒரு சில நடிகர்கள், தனது படத்திற்காக எப்பொழுதும் வாங்கும் சம்பளத்தை விட பாதி அளவிலும் கூட நடித்திருப்பதாக பெருமையாக கூறினார். மேலும், கதைக்கு தேவைப்பட்டால், அந்த நடிகர் எதிர்பார்ப்பதை விட 2 மடங்கும் கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துக் கொண்டார். இது தற்போது சர்ச்சையாகப் பேசப்பட்டு வருகிறது. நடிகர்களின் சம்பளம் மிகவும் அதிகமாக போய்க் கொண்டிருப்பதைக் குறித்து ஏற்கனவே சினிமா ரசிகர்களிடம் அதிருப்தி ஏற்பட்டு வரும் நிலையில், வெளிபடையாக பேசிய மகேஷ் பாபுவின் கருத்துகளுக்கு கலவையான விமர்சனங்களே வருகின்றன.