அம்புட்டு பேசியும் இப்படி ஆகி போச்சே...பாலிவுட் ரசிகர்களே ஆதரவு அளிக்கவில்லையாமே? என்ன தான் பிரச்னை?

முதல் நாள் முதல் ஷோவுக்கு காத்து வாங்கிய ஆமிர்கானின் லால் சிங் சத்தா..!

அம்புட்டு பேசியும் இப்படி ஆகி போச்சே...பாலிவுட் ரசிகர்களே ஆதரவு அளிக்கவில்லையாமே? என்ன தான் பிரச்னை?

என்ன தான் ஹிந்தி படத்திற்கு உதயநிதி ஆதரவு அளித்திருந்தாலும் கூட மக்கள் ஆமிர்கான் படத்திற்கு ரசிகர்கள் யாரும் ஆதரவு அளிக்காமல் போனது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

லால் சிங் சத்தா: கொரோனா ஊரடங்கால் நீண்ட நாட்களாக பாலிவுட் நடிகர் ஆமிர் கான் தயாரிப்பிலும், நடிப்பிலும் உருவாகியிருந்த லால் சிங் சத்தா திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகாமல் இருந்து வந்தது. கொரோனா ஊரடங்கு மட்டுமில்லாது ஆமிர் கானின் சர்ச்சைப்பேச்சும் இப்படம் தள்ளிப்போனதற்கு காரணம். 

பிகே படத்தால் கிளம்பிய எதிர்ப்பு: தனது முன்னாள் மனைவி கிரணிடம் 2015-ம் ஆண்டு நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்து வருவதால், நாட்டை விட்டு வெளியேறி விடலாம் என கேட்டதாக கூறியது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி அவர் நடிப்பில் வெளியாகியிருந்த பிகே திரைப்படமும் இந்துக்கள் மத்தியில் பிரச்னையை ஏற்படுத்தியது. இந்து மதத்தை அவர் புண்படுத்தி விட்டதாக கூறி, அவரது படங்களை புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பேச ஆரம்பித்துவிட்டனர். 

என் படங்களை பாருங்கள்: இந்த கருத்துகளுக்கு பதிலளித்த ஆமிர்கான், இது போன்ற  பாய்காட் பாலிவுட்.. பாய்காட் அமீர்கான்.. பாய்காட் லால் சிங் சத்தா ஹேஷ்டேக்குகள் எனக்கு மிகவும் கவலையை அளிக்கிறது எனக் கூறியிருந்தார். ”தயவு செய்து எனது படத்தை புறக்கணிக்காதீர்கள் என்றும் தயவு செய்து என் படங்களை பாருங்கள்” என்றும் கூறியிருந்தார். 

டிக்கெட் புக்கிங் இல்லை: பல தடைகளுக்கு பிறகு வெளியான லால் சிங் சத்தா படத்தை தமிழில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் வாங்கி வெளியிட்டது. இதற்கான செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய உதயநிதி, இந்தி மொழிக்கு நாங்கள் எதிரி அல்ல, இந்தியை திணித்தால் தான் எதிர்ப்பு தெரிவிப்போம் என கூறியிருந்தார். இன்று வெளியான இப்படத்தின் முதல் ஷோவிற்கு தமிழ்நாட்டில் பெருமளவில் டிக்கெட் புக்கிங் செய்யப்படவில்லை. 

ஏமாற்றத்தை அளித்த வரவேற்பு: சராசரி குழந்தைகளை விட ஐக்யூ லெவல் கொண்ட லால் சிங் சத்தா என்கிற மனிதனின் வாழ்க்கை, காதல் அதனால் ஏற்படும் ஏமாற்றங்கள் போன்றவற்றை விவரிக்கும் படம் தான் லால் சிங் சத்தா. ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ஃபாரஸ்ட் கம்ப் படத்தின் ரீமெக்காக இப்படம் வெளியானது. ஆனால் பாலிவுட் ரசிகர்களே இப்படத்திற்கு வரவேற்பு அளிக்காதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.