பாராட்டிற்கும் கிண்டலுக்கும் வித்தியாசம் தெரியாதவங்க எழுத வந்துட்டா இப்படித்தான்..! ’ஜெயிலர்’ பதிவுக்கு பதிலடி கொடுத்த சுரேஷ் காமாட்சி!

‘ஜெயிலர்’ படத்திற்காக ரஜினிக்கு வாழ்த்து சொல்லிய தயாரிப்பாளரின் ட்விட்டை கிண்டல் செய்ததாக கூறி ட்விட் செய்த ஊடகத்திற்கு ரீட்விட் செய்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாராட்டிற்கும் கிண்டலுக்கும் வித்தியாசம் தெரியாதவங்க எழுத வந்துட்டா இப்படித்தான்..! ’ஜெயிலர்’ பதிவுக்கு பதிலடி கொடுத்த சுரேஷ் காமாட்சி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தின் போஸ்டர் நேற்று வெளியான நிலையில், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் விக்ரம் படத்தை தொடர்ந்து ‘ஜெயிலர்’ திரைப்படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதால் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

இதனிடையே நேற்று வெளியான போஸ்டருக்கு திரைபிரபலங்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை ரஜினி மற்றும் படக்குழுவினர்களுக்கு தெரிவித்தனர். அந்த வகையில் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி  ‘ஜெயிலர்’ போஸ்டருக்காக  ரஜினிக்கும் படக்குழுவினர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து ஒரு டுவிட்டை தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதில் அவர் எத்தனை குதிரைகள் ஓடினாலும், ரஜினிகாந்த் என்ற இந்தக் குதிரை விழும். சட்டென எழும். வெற்றிகொள்ளும் குதிரை. சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். ரஜினி என்ற 3 எழுத்து மேஜிக் #ஜெயிலர் மூலம் மீண்டும் நிகழும். வாழ்த்துகள் நெல்சன் மற்றும் சன்பிக்சர்ஸ் என்று பதிவு செய்திருந்தார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் இந்த பதிவை ஊடகம் ஒன்று, இவர் ரஜினிகாந்தை கிண்டல் செய்து பதிவிட்டிருக்கிறார் என்று செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த செய்திக்கு கண்டனம் தெரிவித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ’பாராட்டிற்கும் கிண்டலுக்கும் கூட வித்தியாசம் தெரியாதா? என்று கூறி ரீட்விட் செய்துள்ளார். மேலும் இந்த இரண்டிற்கும் வித்தியாசம் தெரியாதவங்க எழுத வந்துட்டா இப்படித்தான் பூடம் தெரியாம சாமியாடுவாங்க என்று பதிவிட்டுள்ளார்.