"டான்" பட வெற்றிக்கு - கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்த படக்குழு!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் வெற்றியை கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

"டான்" பட வெற்றிக்கு - கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்த படக்குழு!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த திரைப்படம் டான். அறிமுக இயக்குனர் சிபி.சக்கரவர்த்தி என்பவர் இப்படத்தை இயக்கியிருக்கிறார், மேலும் லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரோடக்‌ஷனும் சேர்ந்து இத்திரைப்படத்தை தயாரித்து உள்ளனர். இத்திரைப்படத்தில் ப்ரியங்கா மோகனன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

இத்திரைப்படம் கடந்த மே மாதம் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது, மேலும் இத்திரைப்படம் வெளியாகி தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் தான் டானின் வெற்றியை படக்குழு சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் உலாவி வருகிறது.