வசூலில் மாஸ்டர் பட சாதனையை முறியடித்தது டாக்டர்..!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் வசூலில் ‘மாஸ்டரை’ முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது.

வசூலில் மாஸ்டர் பட சாதனையை முறியடித்தது டாக்டர்..!!

கோலமாவு கோகிலா படம் மூலம் இயக்குனராக அறிமுகமான நெல்சன்,அடுத்ததாக இயக்கிய  படம் தான் ‘டாக்டர்’.நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

மேலும்,வினய் வில்லனாகவும்,யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, தீபா ஆகியோர் காமெடி வேடங்களிலும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

கடந்த 14-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. படத்தில் காமெடி ஒரு ப்ளெஸ்சாக இருந்தாலும்,இடைஇடையே வரும் அனிருத்தின் பி. ஜி.எம் ரசிகர்களை கவனிக்க வைத்து வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்துள்ளது. அந்தவகையில்,தற்போது விஜய்யின் ’மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்துள்ளது சிவகார்த்திகேயனின் டாக்டர்.

இந்த ஆண்டு அமெரிக்காவில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக மாஸ்டர் இருந்து வந்த நிலையில், தற்போது டாக்டர் படம் அதனை முறியடித்து உள்ளது.

அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் இதற்கு முன் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் 4 லட்சத்து 39 ஆயிரம் டாலர் வசூலித்த நிலையில், டாக்டர் திரைப்படம் 4 லட்சத்து 40 ஆயிரம் டாலர் வசூலித்து சாதனை படைத்துள்ளது.