அந்த கால விக்ரம் படம் படைத்த சாதனை என்ன தெரியுமா? 36 ஆண்டுகளுக்கு முன்பு!!

அந்த கால விக்ரம் படம் படைத்த சாதனை என்ன தெரியுமா? 36 ஆண்டுகளுக்கு முன்பு!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் விக்ரம். அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படம் வருகிற ஜூன் மூன்றாம் தேதி வெளியாகஉள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்ரம் படத்தின் ட்ரைலர் வெளியாகி தாறுமாறு வரவேற்பை பெற்றது. ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி வருகிறது.

இந்நிலையில், கடந்த 1986ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் குறித்து தற்போது பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது உருவாகியுள்ள விக்ரம் படத்திற்கும், பழைய விக்ரம் படத்திற்கும் எந்த சம்மந்தம் இல்லையென்றாலும், அந்த படத்தில் வரும் கதாபாத்திரத்தின் தொடர்ச்சி என கூறப்படுகிறது.

ஆனால், அந்த காலத்திலே தமிழ் திரைப்பட உலகில் 1 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவான முதல் திரைப்படம் விக்ரமாகத் தான் இருந்தது. 1 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட விக்ரம் படம் பெரிய வெற்றியடைந்தது. அதன்படி, விக்ரம் படத்தின் வசூல் 8 கோடி அளவில் இருந்ததாக கூறப்படுகிறது.