போயஸ் கார்டனில் நயன்தாரா வாங்கிய வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா? வாய்பிளந்த கோலிவுட் வட்டாரம்!!!

லேடி சூப்பர்ஸ்டார்  நயன்தாரா போயஸ் கார்டனில் வாங்கியுள்ள வீட்டின் விலை தற்போது வெளியாகியுள்ளது.

போயஸ் கார்டனில்  நயன்தாரா வாங்கிய வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா? வாய்பிளந்த கோலிவுட் வட்டாரம்!!!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாராவை லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார். அதோடு தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் வலம் வருகிறார் நயன்தாரா. ஷாருக்கானுக்கு ஜோடி கோலிவுட், டோலிவுட் என கலக்கி வரும் நயன்தாரா தற்போது பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார். பாலிவுட் ஹீரோ ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் ஒரு தகவல் உள்ளது. 

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோருடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகை நயன்தாரா சென்னை போயஸ் கார்டனில் சொந்தமாக வீடு வாங்கியிருப்பதாக தகவல் வெளியானது. 

ஏற்கனவே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் தான் உள்ளார். அவரை தொடர்ந்து அவரது மருமகனான நடிகர் தனுஷும் சென்னை போயஸ் கார்டனில் வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். கட்டுமான பணிகள் முடிந்ததும் தனுஷ் போயஸ் கார்டனுக்கு குடி பெயரவுள்ளார்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா போயஸ் கார்டனில் உள்ள பிரபல அப்பார்ட்மெண்ட்டில் இரண்டு வீடுகளை வாங்கியுள்ளதாக தகவல் வெளியானது. இரண்டு வீடுகளுமே 4BHKவீடுகள் என்றும் கூறப்பட்டது. அதோடு இந்த வீட்டிற்கு நடிகை நயன்தாரா விரைவில் குடி பெயர உள்ளார் என்றும் தகவல் வெளியாகி வருகிறது.  இந்நிலையில் நயன்தாரா வாங்கியுள்ள வீட்டின் விலை குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

அதன்படி நயன்தாரா வாங்கியுள்ள ஒரு வீட்டின் விலை 18 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது. நடிகை நயன்தாரா தற்போது எக்மோரில் உள்ள பிளாட்டில் வசித்து வருகிறார். புதிய வீட்டிற்கு குடி பெயர்ந்ததும் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண வேலைகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.